ADDED : ஏப் 01, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
பாகலுார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே எம்.காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 35. டிரைவர்; இவரும், அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளான மோகன்குமார், 23, நவீன்குமார், 19, ஆகியோரும் நண்பர்கள். மோகன்குமாரின் சகோதரியுடன், பாபு தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதையறிந்த மோகன்குமார், நண்பரான பாபுவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், பாபு பேசுவதை நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மோகன்குமார், நவீன்குமாருடன் சேர்ந்து, கடந்த, 29ம் தேதி இரவு, 7:15 மணிக்கு, அப்பகுதியில் நின்றிருந்த பாபுவை கத்தியால் தாக்கினார். இதில் தலை மற்றும் முதுகில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார் படி, மோகன்குமார், நவீன்குமார் ஆகியோரை, பாகலுார் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
