ADDED : ஜூலை 12, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மாதேஸ்வரன் மற்றும் போலீசார், பேரண்டப்பள்ளி-யிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து விசாரித்த போது, பீஹார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார், 32, சந்தன்குமார், 26, என்பதும், ஓசூர் அருகே ஆலுார் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி-யாற்றி வருவதும் தெரிந்தது.
அவர்களிடமிருந்த பையை சோதனை செய்தபோது, 1.100 கிலோ அளவில் கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை விற்பனை செய்யும் நோக்கில் அவர்கள் கொண்டு செல்வதை அறிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும், 50,500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறி-முதல் செய்தனர்.
