தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 17 பைக் பறிமுதல்

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 17 பைக் பறிமுதல்

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 17 பைக் பறிமுதல்


ADDED : ஜூலை 14, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சரத்குமார், 28. கூலித்தொழி-லாளி; கடந்த, 7ம் தேதி இரவு, பைரமங்கலத்தில் உள்ள தனது மாமியார் மாரியம்மா வீட்டின் முன், தனக்கு சொந்தமான பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.

அடுத்த நாள் காலை, 7:00 மணிக்கு பார்த்த போது பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த சரத்குமார், கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், தேன்கனிக்கோட்டை தாலுகா, நாகமங்கலம் அருகே சிகரலப்பள்ளியை சேர்ந்த யுவராஜ், 21, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் ஆகியோர், பைக்கை திருடியது தெரிந்-தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்-தனர். அவர்களிடம் விசாரித்த போது, நாகமங்-கலம், வரகானப்பள்ளி, ராயக்கோட்டை, ஒன்னல்-வாடி, கெலமங்கலம் பகுதிகளில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடமி-ருந்து, 17 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us