நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு மாடுகள் திருட்டு
ஓசூர், நவ. 16-
தேன்கனிக்கோட்டை அடுத்த கக்கதாசத்தை சேர்ந்தவர் நாராயணப்பா, 58, விவசாயி; வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து, ஐந்து மாடுகள் வளர்த்து வருகிறார்; கடந்த மாதம், 26 இரவு, 10:00 மணிக்கு மாடுகளுக்கு தீவனம் போட்டு விட்டு வீட்டிற்கு துாங்க சென்றார். மறுநாள் பார்த்த போது, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு மாடுகள் திருட்டு போயிருந்தன.
தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள பிரபாகர் என்பவரது வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் மர்ம நபர்கள் மாடுகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

