தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளி கொலையில் நண்பர்கள் இருவர் கைது

தொழிலாளி கொலையில் நண்பர்கள் இருவர் கைது

தொழிலாளி கொலையில் நண்பர்கள் இருவர் கைது


ADDED : ஏப் 19, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர் :ஓசூரில், கூலித்தொழிலாளி கொலையில், அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரிங்ரோட்டிலுள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர், 42. கூலித்தொழிலாளி. கடந்த, 16ம் தேதி வீட்டிலிருந்து பைக்கில் வெளியே சென்றவர், நேற்று முன்தினம் காலை, நல்லுார் அக்ரஹாரம் பகுதியில் தலையில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார். நல்லுார் போலீசார் விசாரணையில், ஹெல்மெட்டால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. விஜயபாஸ்கர் மனைவி சைத்ரா, 32, புகார் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இக்கொலை தொடர்பாக, ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும், பர்கூர் அருகே நெரிடமானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரிகரசுதன், 19, ஓசூர் பேகேப்பள்ளியில் வசிக்கும், கல்லாவி அருகே ஆனந்துார் கிராமத்தை சேர்ந்த திருமால், 20, ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

கொலையான விஜயபாஸ்கர் மதுவிற்கு அடிமையாக இருந்தார். இவர் தன் நண்பரான ஹரிகரசுதனிடம் கடந்த, 2 மாதங்களுக்கு முன், 24,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடந்த, 16ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, விஜயபாஸ்கர், ஹரிகரசுதன், திருமால் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது, 24,000 ரூபாயை தருமாறு, ஹரிகரசுதன் கேட்டுள்ளார். அதற்கு விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவிக்கவே, கடும் ஆத்திரமடைந்த ஹரிகரசுதன், தன் நண்பரான திருமாலுடன் சேர்ந்து, ஹெல்மெட்டால் விஜயபாஸ்கரை தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us