ADDED : மார் 22, 2026 07:30 AM
உத்தனப்பள்ளி,:உத்தனப்பள்ளி அருகே, சாலையில் நடந்து சென்ற வடமாநிலத்-தவர்கள் மீது, புல்லட் மோதியதில், இருவர் பலியாகினர்.
அசாம்
மாநிலத்தை சேர்ந்தவர் கரம்தேவ் நர்ஜாரி, 26. கிருஷ்ண-கிரி மாவட்டம்,
உத்தனப்பள்ளி அடுத்த கரடிக்குட்டை கிரா-மத்தில் தங்கி, லாலிக்கல்
கிராமத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி
வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தன்னுடன் செக்யூரிட்டியாக
பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் சகிந்திரா குமார் குப்தா, 38, மற்றும்
அசாம் மாநிலம் தன்சவ்ராங் நர்ஜாரி, 32, ஆகியோருடன் நிறுவனத்திற்கு
நடந்து சென்றார்.
கூடுமாக்கனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே
சென்றபோது, தொட்-டமெட்டறையை சேர்ந்த சரண்குமார், 19, ஓட்டி வந்த
புல்லட், 3 பேர் மீதும் மோதியது. இதில் நால்வரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவம-னைக்கு
அனுப்பினர். அங்கு, சரண்குமார், தன்சவ்ராங் நர்ஜாரி அடுத்தடுத்து
உயிரிழந்தனர்.மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரம்தேவ் நர்ஜாரி புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
