/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிறுவன பஸ் மோதி இருவர் பலி நிதி, வேலை வழங்கிய டாடா ஆலை
/
நிறுவன பஸ் மோதி இருவர் பலி நிதி, வேலை வழங்கிய டாடா ஆலை
நிறுவன பஸ் மோதி இருவர் பலி நிதி, வேலை வழங்கிய டாடா ஆலை
நிறுவன பஸ் மோதி இருவர் பலி நிதி, வேலை வழங்கிய டாடா ஆலை
ADDED : செப் 22, 2024 01:29 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளியை சேர்ந்தவர் குமார், 42; மேஸ்திரி; இவரது மனைவி கலா, போடிச்சிப்பள்ளி பஞ்., 1வது வார்டு உறுப்பினர். அதே பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கணேஷ், 53; பா.ஜ., கிளை செயலர்.
குமார், கணேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், கெலமங்கலத்தில் இருந்து ஊருக்கு சென்றனர். குமார் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினார்.
கெலமங்கலம் நான்கு ரோடு சந்திப்பில் சென்ற போது, எதிரே தொழிலாளர்களை ஏற்றி வந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பஸ், இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில், குமார் பஸ்சில் சிக்கி பல அடி துாரம் இழுத்துச் செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனை செல்லும் வழியில் கணேஷ் உயிரிழந்தார்.
போடிச்சிப்பள்ளி மக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அந்நிறுவனத்த்தின், 8க்கும் மேற்பட்ட பஸ்களை உடைத்தனர். சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, சப் - கலெக்டர் பிரியங்கா பேச்சு நடத்தினர். நள்ளிரவு, 12:30 மணிக்கு சடலத்தை போலீசார் மீட்டனர்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், உயிரிழந்த இருவரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு, நிரந்தர வேலை மற்றும் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.
கெலமங்கலம் போலீசார், விபத்திற்கு காரணமான பஸ் டிரைவர் சீனிவாசன், 33, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.