ADDED : நவ 11, 2026 06:08 AM
சூளகிரி:பீஹார்
மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது ஜிமுன், 40. கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி அருகே திருமலைகோட்டா கிராமத்தில் தங்கி, கூலி வேலை செய்து
வந்தார். கடந்த, 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய
நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த கார்,
அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த
அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
சூளகிரி இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா விசாரிக்கிறார்.
அஞ்செட்டி
அருகே உரிகம் மலை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், 62. விவசாயி.
நேற்று முன்தினம் காலை, அஞ்செட்டி - உரிகம் சாலையில், பஜாஜ் பல்சர்
பைக்கில் சென்றார். அவரது மகன் சின்னதுரை பைக்கை ஓட்டினார்.
அப்பகுதியிலுள்ள
கிறிஸ்தவ தேவாலயம் அருகே சென்ற போது, பின்னால் வந்த பைக் மோதியதில்
சாலையில் விழுந்த குணசேகரன் படுகாயமடைந்தார். அவரை
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது,
வழியிலேயே உயிரிழந்தார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
