தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கனிமங்கள் கடத்திய இரு லாரி பறிமுதல்

கனிமங்கள் கடத்திய இரு லாரி பறிமுதல்

கனிமங்கள் கடத்திய இரு லாரி பறிமுதல்


ADDED : ஆக 08, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை வருவாய் ஆய்வாளர் இளங்கோ மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் இரவு, மாஸ்தி சாலையில் உள்ள பேரிகை போலீஸ் சோத-னைச்சாவடி அருகே வாகன சோதனை செய்-தனர். அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் ஜல்லியை, பேரிகையிலி-ருந்து எலுவப்பள்ளிக்கு கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரி கள், பேரிகை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வருவாய் ஆய்வாளர் இளங்கோ புகார்படி, லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

* கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் புவி-யியல் துறை சிறப்பு தாசில்தார் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4 கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. அதனால் லாரியுடன் கற்களை அதிகாரிகள் பறி-முதல் செய்தனர். தாசில்தார் செந்தில்நாதன் புகார்படி, லாரி டிரைவர், உரிமையாளரை கிருஷ்-ணகிரி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us