ADDED : நவ 11, 2026 06:07 AM
சூளகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டம், சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் உதயகுமார்,
29. விவசாயி. இவரது தம்பி மகேஷ், 25. இவரது நண்பர், தர்மபுரி
மாவட்டம், பென்னாகரம் அருகே ஆலம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மதன், 21.
கோனேரிப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் மதன்
பணியாற்றுகிறார்.
ஒரு மாதத்திற்கு முன், மகேஷ் மற்றும் மதன் இடையே
தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த, 8ம் தேதி இரவு, 11:30
மணிக்கு, மகேஷ் வீட்டிற்கு சென்ற மதன், அவர் எங்கே என அவரது அண்ணன்
உதயகுமாரிடம் கேட்டுள்ளார்.அதற்கு, மகேஷை எதற்காக
தேடுகிறீர்கள் என உதயகுமார் கேட்டபோது, அவர்களுக்குள்
வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதன், உதயகுமாரை
தகாத வார்த்தையால் திட்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயமடைந்த உதயகுமார், ஓசூர் தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, மதன் மற்றும் கெலமங்கலம்
அடுத்த ரத்தினகிரியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சிவாஜி, 29, ஆகியோரை,
சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
