/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணிடம் மொபைல் பறிப்பு பைக்கில் வந்த இருவர் சிக்கினர்
/
பெண்ணிடம் மொபைல் பறிப்பு பைக்கில் வந்த இருவர் சிக்கினர்
பெண்ணிடம் மொபைல் பறிப்பு பைக்கில் வந்த இருவர் சிக்கினர்
பெண்ணிடம் மொபைல் பறிப்பு பைக்கில் வந்த இருவர் சிக்கினர்
ADDED : நவ 26, 2025 01:44 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளி அருகே ராஜேஸ்வரி லே அவுட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி மாலா, 32. நேற்று முன்தினம் மதியம், 3:10 மணிக்கு, எழில் நகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இருவர், மாலா கையில் இருந்த, 20,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்த போது, ஓசூர் முத்துராயன் ஜிபியை சேர்ந்த பரத், 19, தர்ஷன், 19, ஆகிய இருவர் மொபைல் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், தர்ஷனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பரத்தை தேடி வருகின்றனர்.