ADDED : டிச 11, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த தாளமடுவை சேர்ந்த விவசாயி வேலு. அவரது வீட்டில் மீன் குட்டை அமைக்கும் பணிகளுக்காக நேற்று, தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்த வேலு, 35, என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வந்தார்.
பொக்லைன் வாயிலாக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டார். மதியம் மிட்டப்பள்ளி பஞ்.,க்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் மோட்டார் அறை பக்கமாக சென்றார். அங்குள்ள மின் கம்பத்திலிருந்து தாழ்வான சென்ற மின்கம்பி, வேலு மீது பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
அவரை காப்பாற்ற முயன்ற தாளமடுவை சேர்ந்த மணி, 70, என்பவர் மீதும், மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் பலியாகினர்.

