/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி
/
சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி
ADDED : செப் 21, 2024 10:18 PM
ஓசூர்:ஓசூர் அருகே கர்னுாரைச் சேர்ந்தவர் தேவராஜ், 30. இவரது மனைவி சசிகலா, 28. இவர்களுக்கு தக்சன், 7, என்ற மகன் இருந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன், நேற்று முன்தினம் மதியம், 11:30 மணிக்கு, வீட்டின் முன் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாகலுார் அருகே தும்மனப்பள்ளியைச் சேர்ந்தவர் மதனகிரியப்பா, 70. வீட்டில் இருந்து வெளியே சென்றவர் கடந்த, 18 மாலை, 5:00 மணிக்கு, தும்மனப்பள்ளியில் உள்ள ஏரியில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். அவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.