ADDED : ஜன 20, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்தவர் பாப்ஜான், 35. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 17 காலை, 9:15 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் ஜெயின்பீ, 58, புகார் படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தங்கியிருந்தார். கடந்த, 17 இரவு, 7:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அருகே, காருகொண்டப்பள்ளியில் தங்கியுள்ள, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கருண், 28, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.