/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் ஊழியர் உட்படஇரண்டு பேர் மாயம்
/
தனியார் ஊழியர் உட்படஇரண்டு பேர் மாயம்
ADDED : செப் 01, 2025 02:03 AM
ஓசூர்;ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 27. தனியார் நிறுவன ஊழியர். இவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் லட்சுமிபிரியா, 25, என்பவரும், கடந்த, 7 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த, 29ம் தேதி மதியம், 2:55 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற அருண்குமார், திரும்பி வரவில்லை. மனைவி லட்சுமிபிரியா புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திகிரி அருகே சிப்பாய் பாளையத்தை சேர்ந்தவர் ஷேக் ஜாவித், 33. சிக்கன் கடை நடத்தி வருகிறார். கடந்த, 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி ஷர்மிளா, 27, புகார் படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.