ADDED : மார் 31, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளி: தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜா சங்கிலி கருப்பன் மற்றும் போலீசார், கக்கதாசம் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, என்.கொத்துார் கிரா-மத்தை சேர்ந்த மோகன்குமார், 31, என்பவரை கைது செய்தனர். 'பி' பிரிவு ரவுடியான இவர் மீது, கொலை உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் உள்ளன.
அதேபோல் ஓசூர், அலசநத்தம் பிரிவு சாலையில் நின்று கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, அலசநத்தத்தை சேர்ந்த முனி, 38, என்பவரை, ஹட்கோ போலீசார் கைது செய்தனர்.