ADDED : டிச 15, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவி உள்பட இருவர் மாயம்
கிருஷ்ணகிரி, டிச. 15-
கிருஷ்ணகிரி
அடுத்த பனந்தோப்பை சேர்ந்தவர் பார்த்திபன், 35, கூலித்தொழிலாளி.
கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரை எங்கு
தேடியும் காணவில்லை. இது குறித்து பார்த்திபன் மனைவி அளித்த புகார்படி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல,
கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்த, 15 வயது பத்தாம் வகுப்பு
மாணவி கடந்த, 13ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார்
விசாரிக்கின்றனர்.