ADDED : ஆக 10, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 57. பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். கடந்த ஜூன், 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமானார். கிருஷ்ணகிரி வேளாண் இயக்குனராக உள்ள அவரது மனைவி கலா, 57, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். விசாரணையில், அதிக கடனால் ஆசிரியர் கார்த்திகேயன் மாயமானது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
அஞ்செட்டி தாலுகாவை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த, 6ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் அஞ்செட்டி போலீசில் கொடுத்த புகாரில், குல்லட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி
முனியப்பன், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.