ADDED : ஜூலை 16, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஈ.பி.எஸ்., நகரை சேர்ந்தவர் கூடு சாய்பு, 75. கடந்த, 12ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரின் மகன் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார்
விசாரிக்கின்றனர். காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் அருள்குமார், 36, விவசாயி. இவர் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் வாங்கி, வடிவேலு என்பவருக்கு கடனாக கொடுத்துள்ளார். வடிவேலு பணத்தை திரும்ப தரவில்லை. பணத்தை கேட்டு அருள்குமாருக்கு, கடன் கொடுத்த கிருஷ்ணன் அழுத்தம் கொடுத்துள்ளார். இதில் மனமடைந்த நிலையில் காணப்பட்ட அருள்குமார், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அருள்குமாரின் மனைவி ஆதிலட்சுமி புகார் படி
காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.