தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளி உள்பட இருவர் மாயம்

தொழிலாளி உள்பட இருவர் மாயம்

தொழிலாளி உள்பட இருவர் மாயம்


ADDED : செப் 07, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு கோபாலபுரா பகுதியை சேர்ந்-தவர் மாதேஷ், 26. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணப்பா நகரில் தங்கி, ஓசூர் ரயில்வேயில் தண்டவாள பணி மேற்பார்வை-யாளராக பணியாற்றி வந்தார். கடந்த, 15 நாட்களுக்கு முன், மனைவியுடன் குடும்ப தகராறு ஏற்பட்டதால், வீட்டை விட்டு வெளியேறியவர், கிருஷ்ணப்பா நகரில் உள்ள தன் நண்பர் அறையில் தங்கியிருந்தார். கடந்த, 1ம் தேதி நண்பகல், 12:00 மணிக்கு, நண்பர் வீட்டிலிருந்து வெளியேறியவர் திரும்பி வர-வில்லை. அவரது தாய் சங்கீதா, 52, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 53. ஓசூர் மூக்கண்டப்பள்ளி அமிர்த நகரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 31ம் தேதி காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வர-வில்லை. அவரது மகன் முனிராஜ், 30, புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us