/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டோல்கேட்டில் இருதரப்பு மோதல்; 7 பேர் கைது
/
டோல்கேட்டில் இருதரப்பு மோதல்; 7 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2025 01:42 AM
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த ஓலப்பட்டியை சேர்ந்தவர் பூவரசன், 27, தனியார் நிறுவன ஊழியர். இவரும் இவரது நண்பர்களும் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து மத்துார் நோக்கி கடந்த, 20 இரவு காரில் சென்றனர். அவர்கள் மத்துார் அருகே நாகம்பட்டி டோல்கேட் கவுண்டரில் உடனடியாக விட பூவரசன் கூறியுள்ளார். தாமதப்படுத்தியதால் அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், பூவரசனை டோல்கேட் ஊழியர்கள் ரவிக்குமார், 19, தேவிக், 19, விஜய், 19 ஆகியோர் சேர்ந்து தாக்கி உள்ளனர். பூவரசன் புகார் படி, மத்துார் போலீசார் மூவரை கைது செய்தனர். அதே போல டோல்கேட் ஊழியர் ரவிக்குமார் கொடுத்த புகார் படி பூவரசன், 27, அசோக்குமார், 37, ஜெகன், 34, வெங்கடேசன், 36 ஆகிய, 4 நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.