ADDED : ஜூலை 14, 2026 06:52 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி, சத்யசாய் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது வீட்டில் நேற்று மதியம் இரண்டு சாரை பாம்புகள் புகுந்தன. சிறிது நேரத்தில், இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னியபடி நடனம் ஆடியது.
இதை பார்த்த சாகுல்ஹமீது குடுபத்தினர், அலறி-யடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அதில், 7 அடி நீளம் கொண்ட ஒரு சாரை பாம்பை பிடித்தனர். மற்றொரு பாம்பு தப்பியது. பின்னர் அதே வீட்டு வாசலில் பதுங்கி இருந்த, ஒரு கட்டு-விரியன் பாம்பையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்-தனர். பின்னர், இரு பாம்பு
களையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
