/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கற்கள் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்
/
கிரானைட் கற்கள் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூன் 22, 2024 01:16 AM
ஓசூர் : கிரானைட் கற்கள் கடத்திய, இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்ட, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள், கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, தேன்கனிக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி அருகே, திருமலை நகரில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த லாரியில், இரு கருப்பு கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.