தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் போக்குவரத்து நெரிசல்; திருட்டு தொல்லை

பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் போக்குவரத்து நெரிசல்; திருட்டு தொல்லை

பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் போக்குவரத்து நெரிசல்; திருட்டு தொல்லை


ADDED : பிப் 22, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி செல்லும் டூவீலர்களால் போக்குவரத்து நெரிசலும், பைக் திருட்டும் அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர்களுக்கு தினமும், 700க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர், தர்மபுரி, பெங்களூருவுக்கு ஏராள-மானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தங்கள் டூவீ-லர்களை பஸ் ஸ்டாண்ட் அருகே நகராட்சி மற்றும் தனியார் டூவீலர் ஸ்டாண்ட் என, 14 இடங்களில் உள்ள ஸ்டாண்டுகளில் நிறுத்திச் செல்கின்றனர். ஆனால், இதில் சிலர், டூவீலர்களை ஸ்டாண்டுகளில் போடாமல், பஸ் ஸ்டாண்ட் உள்ளே, வெளியே நிறுத்திச் செல்கின்றனர். அதன்படி, தினமும், 300க்கும் மேற்-பட்ட டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களும், பய-ணிகளும் எளிதாக சென்று வர முடியாத படி இடநெருக்கடி ஏற்ப-டுகிறது. மேலும் பஸ் ஸ்டாண்ட், எதிரே உள்ள டாஸ்மாக் கடை-களை ஒட்டியும் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன.இதுபோன்ற இடங்களில் நிறுத்தப்படும் டூவீலர்கள் திருடு போனால் போலீசார் உடனடியாக வழக்கு பதிவதில்லை. பலர் டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டுவதில்லை. அதுபோன்ற வாக-னங்கள் திருடு போனால், போலீசார் கண்டு கொள்வதில்லை. பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்கும் டூவீலர்களையும், டாஸ்மாக் கடை முன்பும், ஓரிரு போலீசார் மட்டும் கண்காணிப்பில் ஈடுபடுகின்-றனர்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அப-ராதம் விதிக்க வேண்டும். மேலும் திருட்டு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க, போலீசாருக்கு அழுத்தம் கொடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us