/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சீட்டு பணம் தகராறில் பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற ஒன்றிய தலைவர் கைது

ADDED : பிப் 16, 2024 09:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சீட்டு பணம் தகராறில், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவரை கொல்ல முயன்றதாக, அக்கட்சியின் ஒன்றிய தலைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் மன்னன் சிவக்குமார், 45, ஓட்டல் உரிமையாளரான இவர், பா.ஜ., கட்சியின் மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். பெத்தனப்பள்ளி அடுத்த ஓணிகொட்டாயை சேர்ந்த ரமேஷ், 38, பா.ஜ., கட்சியின் கிருஷ்ணகிரி ஒன்றிய தலைவராக உள்ளார்.
இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில், மன்னன் சிவக்குமார் ஏலச்சீட்டு பணம், 2.50 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், மாதத்தவணை கட்டவில்லை.
கடந்த, 13 ம் தேதி மாலை, கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை டான்சி தபால் அலுவலகம் அருகில், மன்னன் சிவக்குமாரிடம், சீட்டு தொகையை ரமேஷ் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரமேஷ் கல்லால் தாக்கியதில், மன்னன் சிவக்குமார் காயமடைந்தார்.
அவர் புகார்படி ரமேஷை, கொலை முயற்சி வழக்கில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர். அதேபோல, ரமேஷ் புகார்படி, மன்னன் சிவக்குமார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.