மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உண்ணாவிரதம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உண்ணாவிரதம்
ADDED : மார் 04, 2026 08:37 AM
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துாய்மை
பணியாளர்கள், துாய்மை காவலர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில்,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஒரு நாள் அடையாள
உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில கூட்டமைப்பு துணை தலைவர் ராஜி,
முன்னாள் மாநில தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தனர்.
கூட்டமைப்பு மாநில தலைவர் செல்வம் நிருபர்களிடம் கூறிய-தாவது: கிராம பஞ்சாயத்தில், 15 ஆண்டுகளுக்கு
மேலாக மாதம், 250 ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டு டேங்க்
ஆப்பரேட்டர்களாக பணியாற்றி வரும் பணியாளர்களின் கோரிக்கையை
அரசுக்கு வைத்தும் நிறைவேறவில்லை.
இது குறித்து பல முறை மாவட்ட
நிர்வாகத்திடம், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள்
தபால் அனுப்-பியும், முறையாக பதில் வரவில்லை. தமிழகத்தில், தர்மபுரி
மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டும் தான், பணியா-ளர்களை
ஆன்லைனில் கொண்டு வரவில்லை. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர்
பாஸ்கரன் கடந்த, 2017 ஜூலை, 12ல் அனுப்பிய ஆணையில், மேல்நிலை
நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் தொடர்பான விபரங்களை, 2017
மார்ச், 31க்குள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் பதிவு
செய்ய, அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த
உத்தரவை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மட்டும்
இதுவரை நிறைவேற்றவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
