/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோதாவரி நதிநீரை கி.கிரி கொண்டு வர மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
/
கோதாவரி நதிநீரை கி.கிரி கொண்டு வர மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
கோதாவரி நதிநீரை கி.கிரி கொண்டு வர மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
கோதாவரி நதிநீரை கி.கிரி கொண்டு வர மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2025 09:59 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்-ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், ஈஷாவின் 'காவேரி கூக்குரல்' இயக்கம் சார்பில், 'மரம் சார்ந்த விவசாயம்' என்ற கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அவரை, பா.ஜ., முன்னாள் எம்.பி., நரசிம்மன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில செயற்-குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னி-லையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி மற்றும் விவசாயிகள் சந்தித்து பேசினர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், 'மா' விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே, அண்டை மாநிலங்களில் வழங்கப்படு-வது போல், தமிழகத்திலும் மத்திய, மாநில அர-சுகள், 'மா' விவசாயிகளுக்கு மானியம் மற்றும் இழப்பு ஏற்பட்டால், இழப்பீடு வழங்க வேண்டும்.
கெலவரப்பள்ளி அணையில், கர்நாடக மாநில தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலப்பதால், அணை நீரை பயன்படுத்த முடியவில்லை. விவசாய நிலங்-களும் பாதிக்கப்படுகிறது.எனவே, அணையில் ரசாயன நீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஆந்திர மாநிலம், குப்பம் வரை வரும் கோதாவரி நதிநீர் வருகிறது. அதை வேப்-பனஹள்ளி வரை, 8 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் வசதி செய்து கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயம் செழிக்கும். விவசாயிக-ளுக்கு பாதிப்பை உண்டாக்கும் இடத்தில் விமான நிலையம் அமைக்கக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மனுக்களை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

