/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பச்சிளம் குழந்தை கடத்தல் ஊத்தங்கரை பெண் கைது
/
பச்சிளம் குழந்தை கடத்தல் ஊத்தங்கரை பெண் கைது
ADDED : ஆக 31, 2025 06:57 AM

கிருஷ்ணகிரி: குழந்தையை கடத்திய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரி ப்பட்டணம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரி, 24; கணவரை பிரிந்தவர். இவருக்கு 2 வயது மற்றும் 6 மாத பெண் குழந்தைகள் உள்ளன.
நெலமங்களாவில் செங்கல் சூளையில் தங்கி பணியாற்றினர். சில வாரங்களுக்கு முன் ஈஸ்வரி, கிருஷ்ணகிரி வந்தார். ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் கூடாரம் அமைத்து, உறவினர் மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வந்த ஒரு பெண், தன் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், கைக்குழந்தைக்கு ஆடை, விளையாட்டு பொருட்கள் வாங்கி தந்தால் விலகும் எனவும் கூறியுள்ளார். மேலும், ஈஸ்வரி, அவரது ஆறு மாத பெண் குழந்தையை ஆட்டோவில் அழைத்துச் சென்று வாங்கி தந்துள்ளார்.
மேம்பாலம் அருகே இறக்கி விட்டு, கோவிலில் வழிபட்டு வருவதாக கூறி, குழந்தையுடன் கோவிலுக்கு சென்றவர் மாயமானார். ஈஸ்வரியின் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்தனர்.
இதில், ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூரை சேர்ந்த விஜயசாந்தி, 26, குழந்தையை கடத்தியது தெரிந்தது.
கடந்த ஜனவரியில் அவருக்கு பெண் குழந்தை, இறந்து பிறந்தது. இதை கணவரிடம் தெரிவிக்காத விஜயசாந்தி, குழந்தை இருப்பதாகவே கூறி, ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் பார்க்கக்கூடாது எனக் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், ராயக்கோ ட்டை மேம்பாலம் அடியில் பலர் குழந்தையுடன் தங்கியிருப்பதை கவனித்து, குழந்தையை கடத்த திட்டமிட்டது தெரிந்தது.
குழந்தைக்கு துணி வாங்கிய கடையில், 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பிய மொபைல் போன் எண்ணை வைத்து தேடியபோது, ஓசூர் லாட்ஜில் நேற்று அதிகாலை அவரை போலீசார் கைது செய்தனர். குழந்தையை மீட்டு ஈஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

