ADDED : ஜூலை 12, 2026 03:21 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் தெருநாய்களுக்கு ஏ.ஆர்.வி., தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், இனப்பெ-ருக்க கருத்தடை ஆப்பரேஷனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி கமிஷனர் சேகர் கூறினார்.
இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஏ.ஆர்.வி., (ஆன்டி ரேபிஸ் வைரஸ்) எனப்படும் வெறிநாய்க்கடி வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியை நாய்க்கு போடும் பணியில் நகராட்சி அலு-வலர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவ-லர்களுடன் இணைந்து ஈடு-பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில், 1,086 நாய்கள் இருப்பது கண்டறியப்-பட்டுள்ளது. இதில் முதல்-கட்டமாக, 526 நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தது. 2ம் கட்டமாக தற்போது மீதமுள்ள, 560 நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. நேற்று, நக-ராட்சியின், 19 மற்றும், 20வது வார்டுகளில் சுற்றித்திரிந்த, 35 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், இனப்பெ-ருக்க கருத்தடை ஆப்பரேஷனுக்காக, 5 நாய்கள் பர்கூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணியில் கால்நடை மருத்துவர் முனிவெங்கட், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மாதேஷ், சோமேஷ் மற்றும் பணியா-ளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்து வரும் இப்ப-ணிக்கு பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
