ADDED : ஆக 12, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
ஓசூர்,:கிருஷ்ணகிரி
மாவட் டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம்
வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார்
உத்தரவின்படி, ஓசூர் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள
தெருநாய்களுக்கு, வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களை அச்சுறுத்தி
சுற்றித்திரியும் தெருநாய்கள் நாள்தோறும் பிடிக்கப்பட்டு,
கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக
நடக்கிறது.
வார்டுகளில் சிறப்பு வெறிநாய் தடுப்பூசி முகாம்
நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் சாந்தி நகரில் நடந்த முகாமில்,
150 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி
செலுத்தப்பட்டுள்ளது.
