ADDED : அக் 19, 2026 02:00 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றித்திரியும் தெருநாய்கள் தினமும் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஓசூர் மாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட பொதிகை நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில், 190க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, நெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் தெரிவித்துள்ளார்.
