/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2024 01:14 AM
ஓசூர், டிச. 26-
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 101 வது பிறந்த நாள் விழா, ஓசூர் காந்தி சிலை முன் நேற்று கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், கிழக்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், வாஜ்பாய் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்து, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஊட்டினார். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 40 வது வார்டு கவுன்சிலரும், கணக்கு குழு தலைவருமான பார்வதி நாகராஜ் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் முருகன், தொழில் பிரிவு மாநில செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் போத்திராஜன், மகளிரணி மாவட்ட தலைவி மஞ்சுளா உட்பட பலர் பங்கேற்றனர்.
* தேன்கனிக்கோட்டையில் நகர தலைவர் வெங்கட்ராஜ் தலைமையிலும், தளியில் ஒன்றிய நிர்வாகி மார்கண்டேஸ்வரர் தலைமையிலும், வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
* கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் பால
கிருஷ்ணன் தலைமையில், பிரமாண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* ஊத்தங்கரை ரவுண்டானாவில், பா.ஜ., சார்பில், வாஜ்பாய், 100 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மத்திய மண்டல தலைவர் நமச்சிவாயம், வடக்கு மண்டல தலைவர் சிங்காரவேல் ஆகியோர் தலைமையில் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ்ஸ்டாண்டு அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 101 வது பிறந்த நாள் விழா மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா தலைமையில் நடந்தது.
நகர தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ்ஸ்டாண்டு அருகே வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உருவ படத்திற்கு, கட்சியினர் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தர்மபுரி மாவட்ட பா.ஜ., சார்பில் எஸ்.வி., ரோட்டில் வாஜ்பாயின், 101 வது பிறந்தநாள் விழா, பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில்
நடந்தது.