ADDED : பிப் 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, மகனுார்பட்டி அருகே உள்ள சாமாட்சி கொட்டாயை சேர்ந்தவர் சின்னப்பையன், 57, விவசாயி. இவர் நேற்று மாலை திருப்பத்துார் சிங்காரப்பேட்டை சாலையில், மகனுார்பட்டி புதிய பாலம் அருகே பைக்கில் வரும்போது, எதிரே வந்த டிராவல்ஸ் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்துக்குள்ளான வேன் கவிழ்ந்தது. இதில், டிராவல்ஸ் வேனில் பயணம் செய்த, 7 பேர் காயமடைந்தனர். சம்பவ இடம் வந்த சிங்காரப்பேட்டை போலீசார், விபத்தில் பலியான சின்னபையன் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

