/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாரிசு சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம் உதவியாளருடன் வி.ஏ.ஓ., கைது
/
வாரிசு சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம் உதவியாளருடன் வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம் உதவியாளருடன் வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம் உதவியாளருடன் வி.ஏ.ஓ., கைது
ADDED : நவ 27, 2024 02:06 AM
ஓசூர்:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ராமதாஸ் தண்டா பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை, 42. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிலுள்ள பள்ளப்பள்ளியில் வி.ஏ.ஓ.,வாக உள்ளார்.
அங்கு, சாப்ரானப்பள்ளியை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி புஷ்பா, 40, கிராம உதவியாளராக உள்ளார்.
பள்ளப்பள்ளியை சேர்ந்த விவசாயி முருகேசன், 35, வாரிசு சான்றிதழ் கேட்டு, ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
அதை பரிந்துரை செய்ய, 4,000 ரூபாய் தர, வி.ஏ.ஓ., தம்பிதுரை கேட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில், முருகேசன் புகார் செய்தார். அப்போது, போலீசார் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பிய, 4,000 ரூபாயுடன், நேற்று காலை பள்ளப்பள்ளி வி.ஏ.ஓ., அலுவலகம் சென்ற முருகேசன், வி.ஏ.ஓ., தம்பிதுரையிடம் பணத்தை கொடுத்து உள்ளார்.
அவர், கிராம உதவியாளர் புஷ்பாவிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். புஷ்பா அப்பணத்தை பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர். தம்பிதுரை, புஷ்பாவை கைது செய்தனர்.