/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுந்தர விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா
/
சுந்தர விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED : செப் 23, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா மற்றும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு,
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில், சிறப்பு யாகம் வளர்த்து, பூஜை செய்து, பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்-பட்டன. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நகர் வலம் அழைத்துச் சென்றனர். நகர் வலம், பழையபேட்டை, காந்தி-சாலை, வீரப்பன் நகர், டி.பி., சாலை, நரசிம்ம சுவாமி கோவில் சாலை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. வழியில் திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.