/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.சி., மாநாடுக்கு சென்ற பஸ், -மினி லாரி மோதல் 7 பேர் காயம்: பஸ் கண்ணாடி உடைப்பு; சாலைமறியல்

ADDED : ஜன 27, 2024 04:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த பத்தலஹள்ளியை சேர்ந்த வி.சிறுத்தைகள் கட்சியினர், 60 பேர் திருச்சியில் நடைபெறும் அக்கட்சியின் மாநாடுக்கு தனியார் பஸ் மூலம் நேற்று காலை சென்றனர். பஸ்சை தர்மபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ்,24, ஓட்டி சென்றார்.
பஸ், நேற்று காலை 11:00 மணியளவில் பொம்மிடி ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பொம்மிடியில் இருந்து ஒட்டுபட்டிக்கு வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதியது. இதில், மினி லாரி டிரைவர் வாசி கவுண்டனூரை சேர்ந்த சத்யராஜ், 38, பஸ்சில் வந்த பத்லஹள்ளியை சேர்ந்த மாரியப்பன், 50, மாதம்மாள், 45, மணி யரசு, 23, சுப்பிரமணி, 30, விமல்குமார், 34, அமித பச்சம், 40. ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்த வர்கள் அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக தர் மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டிரைவர் முகேஷ் குடிபோதையில் பஸ் ஓட்டியதால் தான், விபத்து ஏற்பட்டது எனக்கூறி பஸ் கண்ணாடிகளை வி.சிறுத்தை கட்சியினர் அடித்து உடைத்தனர். பஸ் உரிமையாளர் விபத்து நடந்த இடத்திற்கு வர வேண்டும் என கூறி பொம்மிடி ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர். ஒரு மணிநேரம் கடத்தூர் -பொம்மிடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புகாரின் படி பஸ் டிரைவர் முகேஷ்சை பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.