கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்-டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த டெம்போ டிராக்ஸ் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய இரண்டு வாகனங்கள், முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாகனங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் வரும், 27ல், காலை, 11:00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்பு-பவர்கள் வரும், 27 காலை, 10:00 மணி முதல், 10:30 மணிக்குள் நுழைவுக்கட்டணமாக, 50 ரூபாய், வாகனத்திற்கான முன்-வைப்புத் தொகையாக, 2,000 ரூபாய் செலுத்திப் பதிவு செய்து-கொள்ள வேண்டும்.அதேபோல வாகனங்களை ஏலம் எடுக்கும் நபர்கள், ஏலத்-தொகை முழுவதும், ஜி.எஸ்.டி., தொகையுடன் அன்றே கட்ட வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற இதரர்களுக்கு, முன்பணம் மீண்டும் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

