/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக தமிழ் மக்கள் நன்மைக்கு கிருஷ்ணகிரியில் வேள்வி பூஜை
/
உலக தமிழ் மக்கள் நன்மைக்கு கிருஷ்ணகிரியில் வேள்வி பூஜை
உலக தமிழ் மக்கள் நன்மைக்கு கிருஷ்ணகிரியில் வேள்வி பூஜை
உலக தமிழ் மக்கள் நன்மைக்கு கிருஷ்ணகிரியில் வேள்வி பூஜை
ADDED : அக் 21, 2024 07:55 AM
கிருஷ்ணகிரி: உலக தமிழ் மக்கள் நன்மை பெற வேண்டி, கிருஷ்ணகிரியில் மாபெரும் வேள்வி நடந்தது.
கிருஷ்ணகிரியில், மாவட்ட திருவள்ளுவர் நலச்-சங்கம், வி.பி.எஸ்., வேத பாடசாலை மற்றும் குருகுலப்பள்ளி இணைந்து, நேற்று உலக மக்கள் நன்மை வேண்டி மாபெரும் வேள்வியை நடத்-தினர். இதில், உலக தமிழ் மக்கள் அனைவரும் நன்மை பெற வேண்டும். நம் மாவட்ட அனைத்து மக்களும், விவசாயிகள், வியாபாரிகள் வளம் பெற வேண்டும்.
தேவையான மழை பெய்து, மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பது உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம், நவ சண்டி யாகம் ஆகியவை நடந்தன. மேலும் தனித்தனியாக சங்கல்பமும், கிரக சாந்தியும் செய்து வைக்கப்பட்டன. முன்ன-தாக, திருக்குறளை பாடலாக பாடி, திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், திருவள்ளுவர் நலச்சங்க நிர்வா-கிகள், உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர், பா.ஜ.,வினர், பஜ்ரங்தள் நிர்வாகிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் உள்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.