/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு
/
விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 29, 2024 01:19 AM
விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு
ஓசூர், டிச. 29-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதி தே.மு.தி.க., சார்பில், அக்கட்சியின் நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் கிறிஸ்டோபர், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் முனிராஜ், முன்னாள் செயலாளர் சண்முகம், மஞ்சுளா வெங்கடாஜலபதி செட்டி மற்றும் நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஓசூர் பகுதியிலும், மாநகர மாவட்ட தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.