தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூன் 16, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை; ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொட்ட கொளம் பஞ்., செங்கல்

நீர்பட்டி, சோளையூர், செட்டிப்பட்டி, கொட்ட-கொளம், வைரம்பட்டி, நாகனுார் மற்றும் கிருஷ்-ணாபுரம் ஆகிய, 7 கிராமங்கள் உள்ளன. இக்கிரா-மங்களை இணைக்கும் வகையில், 4 கி.மீ., நீள, கல்லாவி இணைப்பு சாலை அமைந்துள்ளது. இச்-சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, முற்-றிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்-ளது.

இதனால் இக்கிராமங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதில்லை. சாலை வசதி மற்றும் பஸ் வசதி இல்லாததால், இந்த, 7 கிரா-மங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாண-வர்கள் தினமும் பல கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்குக்கூட ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கிராமத்திற்குள் வர மறுப்பதால், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோயாளி-களை பிரதான சாலைக்குத் துாக்கிச்செல்லும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரி-விக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமை-யான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்-வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், 100-க்கும் மேற்பட்டோர் நேற்று, கல்லாவி - தர்மபுரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் ஊத்தங்கரை டி.எஸ்.பி., ராம-மூர்த்தி மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us