/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராம மக்கள் ஒன்றிணைந்து முயற்சி சாமாண்டப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீர்
/
கிராம மக்கள் ஒன்றிணைந்து முயற்சி சாமாண்டப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீர்
கிராம மக்கள் ஒன்றிணைந்து முயற்சி சாமாண்டப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீர்
கிராம மக்கள் ஒன்றிணைந்து முயற்சி சாமாண்டப்பட்டி ஏரிக்கு வந்த தண்ணீர்
ADDED : அக் 04, 2025 12:48 AM
போச்சம்பள்ளி, கிராம மக்கள ஒன்றிணைந்து முயற்சி எடுத்ததில், சாமாண்டப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்தானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, சாமாண்டப்பட்டி ஏரி, மழை காலங்களில் மட்டும் நிரம்புவது வழக்கம். மழை பொய்த்து போனதால், ஏரி வறண்டு மானாவாரி பயிர் மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் சாமாண்டப்பட்டி, பாப்பாரப்பட்டி, கொட்டாவூர், வையம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து, ஒவ்வொரு விவசாயிடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக பெற்று, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றின் படுகையில் கிணறு அமைத்தனர். அதன் மூலம் பெறப்பட்ட தண்ணீரை, குழாய்கள் அமைத்து, சாமாண்டப்பட்டி ஏரிக்கு கொண்டு வர நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, சிரமத்திற்கு ஆளாகி திட்டத்தை நிறைவேற்றினர்.
நேற்று சாமாண்டப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்தானது. இதை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தினர்.
இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன், 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அதேபோல் அ.தி.மு.க., சார்பில் இளைஞர் பாசறை மாவட்ட செயலர் சதீஷ் மற்றும் அ.தி.மு.க.,வினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். அ.தி.மு.க., சார்பில், 25 எச்.பி., மின்மோட்டார் இரண்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒரே நாளில், இரண்டு மணி நேர இடைவெளியில் தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.