/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஷ்வ வல்லப தீர்த்த சுவாமிகள் ஓசூர் வருகை
/
விஷ்வ வல்லப தீர்த்த சுவாமிகள் ஓசூர் வருகை
ADDED : டிச 31, 2024 07:08 AM
ஓசூர்: கர்நாடக மாநிலம், சிர்சி அருகே சோதே வாதிராஜ மடம் உள்ளது. இங்கு, 36 வது பீடாதிபதியாக ஸ்ரீ விஷ்வவல்லபதீர்த்த சுவாமிகள் உள்ளார். உலக அமைதிக்காகவும், ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் உள்ள மடத்தில் நடக்கும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தில் பங்கேற்கவும் ஓசூர் வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் உள்ள சுதா எண்டர்பிரைசஸ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். அவருக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) ஓசூர் கிளை சார்பில், தலைவர் சுதா நாகராஜன், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீ விஷ்வ வல்லப தீர்த்த சுவாமிகளுக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர். பண்டிதர்கள் ராமசேஷன், வெங்கடேசன், கிருஷ்ணசாமி ஆகியோர், பக்தர்களுக்கு உபன்யாசம் வழங்கினர். அதன் பின், ஆன்மிகத்தை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து, ஸ்ரீ விஷ்வவல்லபதீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். திரளான பக்தர்கள் ஆசி பெற்றனர்.