sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

/

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 26, 2026 06:53 AM

Google News

ADDED : ஜன 26, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கலெக்டர் தினேஷ்குமார், வாக்காளர் விழிப்பு-ணர்வு கையெழுத்து இயக்கம், வாக்காளர் விழிப்-புணர்வு பேரணி மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல் விளக்க வாகனம் ஆகியவற்றை துவக்கி வைத்து, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொது-மக்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நிர்-வாகம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்-டன.* ஓசூரில், 16வது தேசிய வாக்காளர் தினத்தை-யொட்டி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஓசூர் காமராஜ் காலனி விளையாட்டு மைதானம் முன் துவங்கிய பேரணியை, சப்- கலெக்டர் ஆக்-ரிதி சேத்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதேபோல், சூளகிரியில் வாக்காளர் தின விழிப்-புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி துவக்கி வைத்தார்.

* போச்சம்பள்ளியில், வருவாய்த்துறை சார்பில் நடந்த வாக்காளர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, மேள, தாளங்கள் முழங்க, 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுடன் பேரணியாக பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கு நாடக கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.

* ஊத்தங்கரையில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணிக்கு, மாவட்ட ஆதிதிரா-விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us