தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு


UPDATED : அக் 30, 2026 08:49 PM

ADDED : அக் 30, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 08:49 PM ADDED : அக் 30, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து இன்று (அக்.,30) வினாடிக்கு, 2,000 கன அடியாக சரிந்தது.

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று (அக்.,29) மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2,500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மாலை, 5:00 மணிக்கு 2,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்து, அங்குள்ள ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெகுவாக நீர்வரத்து சரிந்து கொட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us