/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 592 கன அடி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 592 கன அடி
ADDED : மே 29, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 20ல் நீர்வரத்து வினாடிக்கு, 4,208 கன அடியாக இருந்தது. நேற்று முன்தினம், 1,097 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 592 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து, 708 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.90 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளதாலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தாலும், 9வது நாளாக நேற்றும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை என, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம் என பொதுப் பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.