/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் இன்று தண்ணீர் திறப்பு
/
கே.ஆர்.பி., அணையில் இன்று தண்ணீர் திறப்பு
ADDED : டிச 18, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.ஆர்.பி., அணையில் இன்று தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி, டிச. 18--
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து, 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கே.ஆர்.பி., அணையில் இருந்து, 2ம் போக சாகுபடிக்கு இன்று (டிச.18) முதல், வரும், 2025 ஏப்., 16 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.