தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : மார் 06, 2026 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:பாரூர் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல, கே.ஆர்.பி., அணை-யிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 7 நாட்களாக சராச-ரியாக, 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 247 கன அடியாக இருந்த நிலையில் நேற்று, 371 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து நேற்று முன்தினம் பாசனத்திற்கு கால்வாயில், 179 கன அடி, தென்-பெண்ணை ஆற்றில், 193 கன அடி என மொத்தம், 372 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாரூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், தென்பெண்ணை ஆற்றில், 560 கன அடியும், பாசனத்திற்கு கால்வாயில், 179 கன அடியும் என மொத்தம், 739 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து, பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு இருக்கும் என, நீர்வளத்துறை அதிகா-ரிகள் தெரிவித்தனர். அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.95 அடியாக இருந்தது.

ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று வினாடிக்கு, 773 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு, 288 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 485 கன அடி என மொத்தம், 773 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. சூளகிரி, சின்னாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர்திறப்பும் இல்லை. நீர்மட்டம் மொத்தமுள்ள, 32.80 அடியில் நேற்று, 31.17 அடியாக இருந்தது.

பாரூர் ஏரியின் முழு உயரமான, 15.60 அடியில் நேற்று, 11.10 அடியாக நீர்மட்டம் இருந்தது. ஏரிக்கு, 86 கன அடி நீர்வரத்து இருந்தது. ஏரியிலிருந்து, 62 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர்தி-றப்பும் இல்லை. நீர்மட்டம் மொத்தமுள்ள, 19.60 அடியில் நேற்று, 16.60 அடியாக நீர்மட்டம் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us