ADDED : மே 29, 2026 03:03 AM
கிருஷ்ணகிரி;மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 26ம் தேதி நீர்வரத்து அதிகரித்து, இரவு வினாடிக்கு, 1,000 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கடந்த, 2 நாட்களாக மழை-யின்றி நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 484 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 451 கன அடியாக குறைந்தது. ஆனால் அணை நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளதால், நேற்று முன்தினம், 183 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று, 328 கன அடி-யாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. அணை நீர்-மட்டம், 50 அடியாக உள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, 3வது நாளாக நேற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்-டிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகா-ரிகள் தெரிவித்தனர். எனவே ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தி உள்-ளனர்.
