/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாணியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு
/
வாணியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு
ADDED : டிச 08, 2024 01:06 AM
வாணியாறு அணையில்
நீர் திறப்பு குறைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 8---
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை, 65.27 அடி கொள்ளளவு கொண்டது. 'பெஞ்சல்' புயலால் பெய்த மழையில் கடந்த, 1ல் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அன்று அணையிலிருந்து வினாடிக்கு, 2,500 கன அடியும், 2ல், 3,750 கன அடி நீரும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டது. அணைக்கு நேற்று மதியம், 3:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 325 கன அடி நீர்வரத்து உள்ளது. அது அப்படியே, வாணியாற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணை நீர்மட்டம், 63.30 அடியாக உள்ளது. அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், வாச்சாத்தி, பறையப்பட்டி ஏரிகள் நிரம்பி உள்ளன.