2 ம் போக சாகுபடிக்கு கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
2 ம் போக சாகுபடிக்கு கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 10, 2026 05:43 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்-களில், இரண்டாம்போக சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் தினேஷ்-குமார், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்து மலர் துாவினர். பின்னர் கலெக்டர் தினேஷ்குமார் கூறி-யதாவது:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து இன்று (நேற்று) முதல் வரும் மே. 8 வரை, 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்-பட்டுள்ளது. தற்போதுள்ள நீர் அளவினை கொண்டும், நீர் வரத்தை எதிர்நோக்கியும், வலது-புற கால்வாய் மூலம் வினாடிக்கு, 75 கன அடியும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு, 76 கன அடி என மொத்தம், 151 கன அடிநீர் திறந்து விடப்-பட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியமுத்துார், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்ட-லப்பட்டி உள்பட, 16 பஞ்சாயத்துகளில், 9,012 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்-ளது. எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வளத்துறைக்கு விவசா-யிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது அணைக்கு வினாடிக்கு, 174 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 47.45 அடியாக நீர்மட்டம் இருந்தது. உதவி செயற்பொறியாளர் சபரிநாதன், உதவி பொறியாளர்கள் வெங்கடேஷ், பொன்னிவளவன், தாசில்தார் அருள் உள்பட பலர் பங்கேற்றனர்.
